'அகிலன்' உள்பட 4 தமிழ் படங்கள், மொத்தம் 14 படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

'அகிலன்' உள்பட 4 தமிழ் படங்கள், மொத்தம் 14 படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

 

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 4 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 14 திரைப்படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

அகிலன்: ஜெயம் ரவி நடித்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் இந்த வாரம் ஜீ 5 சேனலில் வெளியாகிறது.

அயோத்தி: சசிகுமார் நடித்த இந்த படம் மாபெரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. சசிகுமாருக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான இந்த வெற்றி படமும் ஜீ5 தமிழ் சேனலில் வெளியாகிறது.

பாஹீரா: பிரபுதேவா வித்தியாசமான தோற்றங்களில் நடித்த இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிட்யில் வெளியாகிறது.

அரியவன்: ஈஷான் நாயகனாகவும், ப்ராணலி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ள 'அரியவன்’ திரைப்படத்தின் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த வாரம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகிறது.

அவதார்: உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்ட அவதார்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘அமிகோஸ்’ என்ற தெலுங்கு படமும், Shehzada என்ற இந்தி திரைப்படம், ’மர்டர் மிஸ்டரி 2’ என்ற ஆங்கில படமும், 'காப்பிகேட் கில்லர்’ என்ற வெப் தொடரும் வெளியாகவுள்ளது.

அதேபோல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘கேஸ்லைட்’ என்ற இந்தி திரைப்படம், ‘ஸ்ரீதேவி சோபன்பாபு’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது.

மேலும் ‘சாதிகன்னி ரெண்டு எக்கலாரு’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES