சிகப்பு ரோஜாக்கள், ஆளவந்தான், மன்மதன் வரிசையில் ஒரு சைக்கோ படம்: 'பாகீரா' டிரைலர்..!
சிகப்பு ரோஜாக்கள், ஆளவந்தான், மன்மதன் ஆகிய படங்களில் வரும் ஒரு சைக்கோ தான் இந்த படத்திலும் என்பதை இயக்குனர் அந்த காட்சிகளின் மூலமே டிரைலரில் தெரிவித்து விடுகிறார் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
பிரபு தேவா நடிப்பில் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகீரா’ திரைப்படத்தில் பிரபுதேவா பெண்களை வரிசையாக கொள்ளும் சைக்கோ கேரக்டரில் நடித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார்? காவல்துறை அவரை பிடித்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிய வருகிறது.
பிரபு தேவா பல கெட்டப்களில் பல பெயர்களில் ஒரு சைக்கோவாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நாயகிகளாக அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகிய ஏழு பேர் இந்த படத்தில் நல்ல நடித்துள்ளனர். மொத்தத்தில் ஒரே திரில் கதையம்சம் கொண்ட படத்தை எதிர்பார்க்கலாம்.
மார்ச் 3ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.