ஒரு பொண்ணு நம்மள முழுசா நம்பற வரைக்கும் அவ கண்ணை மட்டும் தான் பாத்து பேசணும்: ‘அரியவன்’ டிரைலர்
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான ‘அரியவன்’ என்ற படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திடீர் திடீரென இளம் பெண்கள் மர்மமான முறையில் விபத்துக்கள் மூலம் உயிரிழந்து வரும் நிலையில் அது விபத்தல்ல, கொலைதான் என கண்டுபிடிக்கும் நாயகன் அந்த கொலையை செய்யும் நபர் யார் என்பதை கண்டுபிடிப்பது இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் த்ரில் காட்சிகள் அமைந்துள்ள இந்த படம் நிச்சயமாக ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’யாரடி நீ மோகினி’ ’திருச்சிற்றம்பலம்’ போன்ற குடும்பப்பாங்கான ரொமான்ஸ் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் முற்றிலும் வேறு பாணியில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் மூன்றாம் தேதி வெளியாக இருப்பதாக ட்ரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷான் நாயகனாகவும், ப்ராணலி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.