நம்ம ஆட்டத்தை டோட்டலா கலைச்சு ஆடுனது அவன் தான்: 'கலகத்தலைவன்' டிரைலர்

நம்ம ஆட்டத்தை டோட்டலா கலைச்சு ஆடுனது அவன் தான்: 'கலகத்தலைவன்' டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள ‘கலகத்தலைவன்’ திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளி ஆகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது சுமார் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் திரில் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆரவ் இந்த படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்திருக்கிறார் என தெரிகிறது.

மகிழ்திருமேனி படம் என்றாலே சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற வகையில் இந்த படமும் அந்த பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES