திருமண தேதியை அறிவித்த நட்சத்திரக் காதல் ஜோடி… குஷியில் ரசிகர்கள்!

திருமண தேதியை அறிவித்த நட்சத்திரக் காதல் ஜோடி… குஷியில் ரசிகர்கள்!

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட்- ரன்பீர் கபூர் இருவரும் ஏற்கனவே காதலித்து வருவது ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இதையடுத்து எப்போது திருமணம் என்று பல ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்தக் காதல் ஜோடி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வந்த ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங் தம்பதிகளின் மகனான ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வருகிறார். அதேபோல முன்னணி இயக்குநர் மகேஷ்பட் மற்றும் சோனி ரஸ்டானின் மகளான ஆலியா பட்டும் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர்கள் கடந்த 2019 முதலே காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதையடுத்து எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ரிஷி கபூர்- நீத்து சிங்கின் திருமணத்தைப் போன்றே இவர்களது திருமணமும் செம்பூரில் உள்ள ஆர்கே இல்லத்தில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு ஆலியா பிரபல டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி ஆகியோர் வடிவமைத்த உடைகளை அணியவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வரும் ஏப்ரல் 13 முதல் சங்கீத், மெஹந்தி எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இவர்களது திருமணத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் இந்த மாதத்தின் இறுதியில் தொழில்முறை நண்பர்களுக்காக பிரம்மாண்ட வரவேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆலியா பட்- ரன்பீர் கபூரின் திருமணத் தகவலையடுத்து சினிமா ரசிகர்கள் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

HOT GALLERIES