நீ வெளியே பாக்கத்தான் மனுஷன், உள்ளுக்குள்ள நாய்: 'நாய்சேகர்' டீசர்

நீ வெளியே பாக்கத்தான் மனுஷன், உள்ளுக்குள்ள நாய்: 'நாய்சேகர்' டீசர்

பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ’நாய் சேகர்’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நீ வெளியே பார்க்க தான் மனிதன், ஆனால் உள்ளுக்குள் நாயின் செயல்பாடுகள் உன்னிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளது என்றும், அதே போல் ’அது வெளியே பார்க்கத்தான் நாய், ஆனால் உள்ளுக்குள் மனிதனோட செயல்பாடுகள் ஆரம்பமாகி விட்டது’ என்ற வசனத்துடன் இந்த படத்தின் டீசர் ஆரம்பமானதிலிருந்தே சதீஷ் நாயாகவும் அவர் வளர்க்கும் நாய் மனிதனாகவும் மாறினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்று தெரியவருகிறது.

சதீஷ் நாயாக மாறி நாய் போலவே செய்யும் காட்சிகள், அதே போல் அவர் வளர்க்கும் நாய் மனிதன் போகவே செய்யும் காட்சிகள் காமெடியின் உச்சகட்டம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஷ் ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, ஞானசம்பந்தன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர்களின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கிஷோர் ராக்குமார் இயக்கி உள்ளார் என்பதும், அஜேஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவும் ராமபாண்டியன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES