பிரிட்டிஷ் போலீஸ் ராம் போராளி கோமரம் பீம் அனல் பறக்கும் ஆர்.ஆர்.ஆர் ட்ரெய்லர்!

பிரிட்டிஷ் போலீஸ் ராம் போராளி கோமரம் பீம் அனல் பறக்கும் ஆர்.ஆர்.ஆர் ட்ரெய்லர்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.


பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 3ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
 

இதில் ராம்சரண் “ராம்” என்ற போலீஸ் அதிகாரியாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கோமரம் பீம் என்ற கோண்டு இன மக்களின் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் ஆல்யா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோமரம் பீம் பிரிட்டிஷை எதிர்க்கும் போராளியாகவும், ராம் பிரிட்டிஷ் போலீஸில் பணிபுரிபவராகவும் காட்டப்பட்டுள்ளனர். இதனால் ஆரம்பத்தில் இவர்களுக்குள் மோதல் பின்பு இருவரும் இணைந்து பிரிட்டிஷை எதிர்ப்பது போன்று கதை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.

LATEST News

Trending News