திக்குவாயனாக புதிய பரிமாணத்தில் புகழுடன் நடிக்கும் சந்தானத்தின் “சபாபதி” ட்ரைலர்! Sabhaapathy Trailer – Tamil

திக்குவாயனாக புதிய பரிமாணத்தில் புகழுடன் நடிக்கும் சந்தானத்தின் “சபாபதி” ட்ரைலர்! Sabhaapathy Trailer – Tamil

விஜய் டிவியில் அறிமுகமாகி உழைப்பால் உயர்ந்து மக்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்களுள் ஒருவர் தான் நடிகர் சந்தானம் அவர்கள்! விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் என்பதும் அனைவரும் அறிந்ததே! அடுக்குமொழி வசனம் பேசி அடுத்தவரை பேசவிடாமல் பேசினாலும் அதை தவிடுபொடியாகும் அளவிற்கு நகைச்சுவை வசனங்கள் பேசி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் சந்தானம் என்றால் அது மிகையாகாது!

 

சின்னத்திரையிலிருந்து பேராதரவுடன் வெள்ளித்திரையில் நுழைந்த சந்தானத்திற்கு மக்களால் பலத்த ஆதரவு கிடைத்தது! சிறு வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்பு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரத்தொடங்கினர்! அது மட்டும் இல்லாமல் அடுக்கடுக்காக படங்கள் குவிய தொடங்கியது! நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர், ஹீரோவாக அவதாரம் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்! ஆனாலும், இன்று வரை இவர் நடிக்கும் படங்களில் சிரிப்புக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

LATEST News

Trending News

HOT GALLERIES