டிவி தொடரில் வில்லியாக மிரட்டும் தனுஷ் பட நாயகி!

டிவி தொடரில் வில்லியாக மிரட்டும் தனுஷ் பட நாயகி!

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகை நமீதா சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்த படத்தின் நாயகி ஒருவர் சின்னத்திரையில் வில்லி வேடத்தில் நடிக்க வந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடித்த ’திருடா திருடி’ என்ற திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த நடிகை சாயாசிங், சமீபத்தில் வெளியான விஷாலின் ’ஆக்சன்’ உள்பட சில படங்களில் நடித்தார். மேலும் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்து முடித்துள்ள ’தமிழரசன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே நாகம்மா, ரன் உட்பட ஒரு சில டிவி தொடர்களில் நடித்து இருந்த சாயாசிங் தற்போது ’பூவே உனக்காக’ என்ற டிவி தொடரில் வில்லி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் அஜீம் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News