கர்ப்பமாக இருக்கும் போது தனது கணவருடன் நடிகை சமீரா ரெட்டி எடுத்த அழகிய புகைப்படம்- நாம் பார்க்காதது
நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அப்படத்திற்கு பிறகு மக்கள் அவரை அப்படி கொண்டாடினார்கள். படத்தில் அவர் இறப்பது போல் காட்சி வர ரசிகர்கள் அவர் மீது அதிக ஆர்வத்தை காட்டினார்கள்.
சமீரா சமீரா என்று புலம்பாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அக்ஷய் என்பவரை 2014ம் ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் தான் சமீராவிற்கு மகள் பிறந்தார்.
தற்போது சமீரா தனது முதல் கர்ப்பத்தின் போது தனது கணவருடன் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.