சனிக்கிழமை சம்பவம் பண்ணப் போகும் சூர்யா.. ‘சீன்’ ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது?
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்த நடிகர் சூர்யா 'சீன்' படத்தின் புரமோஷன் பணிகளை தொடர்ந்து சூடு பறக்க செய்து வருகிறார். இந்த ஆண்டு வேறலெவல் எனர்ஜியில் சூர்யாவை பார்க்கிறோம் என உடன் இருப்பவர்களே கூறும் அளவுக்கு நடிகர் சூர்யா ஜெட் வேகத்தில் தனது அடுத்தடுத்த பட வேலைகளை பக்காவாக பிளான் பண்ணி பார்த்து வருகிறார்.
ஏற்கனவே துபாயில் பிரம்மாண்டமாக சீன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டு ரசிகர்களை கவர தற்போது சென்னையில் இந்த வாரம் சனிக்கிழமை சீன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்துள்ள சீன் படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். நடிகை நஸ்ரியா, நடிகர் நஸ்லென் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு செம சீன் இருக்கு: ஆவேஷம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ந்து 4 நாட்கள் பாக்ஸ் ஆபீஸில் செம சீன் காட்ட காத்திருக்கிறார் சூர்யா.
சீன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா: துபாயில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதி அதாவது இந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மாலை 5 மணிக்கு மேல் சீன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தூள் கிளப்பப் போகிறது. அதன் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா பேச்சுக்கு வெயிட்டிங்: இந்த ஆண்டு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என பேக் டு பேக் 2 பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா ஹாட்ரிக் வெற்றியை அடிக்க தீபாவளிக்கு தனது சீன் படத்தை வெளியிடுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு டாப் நடிகர்கள் படங்கள் வரவில்லையே என்கிற ஏமாற்றத்தை இந்த ஆண்டு போக்க உள்ளார் சூர்யா. மேலும், சீன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.