ஜெயிலர் 2வில் அறிமுகமாகும் வித்யா பாலன்.. முதல் படத்திலேயே இப்படி ஒரு சங்கடம்.. நடுங்கிட்டாராம்!

ஜெயிலர் 2வில் அறிமுகமாகும் வித்யா பாலன்.. முதல் படத்திலேயே இப்படி ஒரு சங்கடம்.. நடுங்கிட்டாராம்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் நாளை மறுதினம் (அக் 15) வெளியாகவிருக்கிறது. படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகை வித்யா பாலன் கோலிவுட்டுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டில் இப்போது அனைவரது கவனமும் ஜெயிலர் 2 படத்தின் மீது இருக்கிறது. இதற்கு முன்பு எடுத்த ஜெயிலர் 1 மெகா ஹிட்டடித்தது. அந்தக் காம்போ மீண்டும் சேர்ந்திருப்பதால்தான் இப்படி ஒரு ஹைப். நாளை மறுநாள் படம் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் தரமான சம்பவம் என்ற நம்பிக்கையில் படக்குழுவும், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் இருக்கிறார்கள். இதில் வித்யா பாலனும் முக்கியமான கேரக்டரை ஏற்றிருக்கிறார்.

Jailer 2 Vidya Balan Was Scared to Smoke in Front of Rajinikanth Reveals Nelson Dilipkumar

கோலிவுட்டில் அறிமுகம்: அவர் ஏற்றிருக்கும் கேரக்டரின் பெயர் காந்தா. ஏற்கனவே தமிழில் அவர் மனசெல்லாம் படத்திலேயே அறிமுகமாவதாக இருந்தது. ஆனால் சில கரணங்களால் அவர் ரிஜெக்ட் செய்யப்பட்டார். இத்தனை வருடங்கள் கழித்துதான் இப்போதுதான் அவர் கோலிவுட் பக்கம் வந்திருக்கிறார். ஜெயிலர் 2வில் அவரது கேரக்டர் அறிமுக வீடியோவும் அட்டகாசமாகவே இருந்தது. ஸ்டைலாகவும், கெத்தாகவும் வந்து ரஜினிகாந்த்தின் முகத்தில் புகை விடுவது மாதிரி அந்தக் காட்சி இருந்தது.

ஷூட்டிங்கில் நடந்தது: ஆனால் அப்படி நடிப்பதற்கு படாத பாடு பட்டிருக்கிறார் வித்யா பாலன். படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், "படத்தின் ஒரு காட்சியில் ரஜினிக்கு முன்பு நின்று சிகரெட் பிடித்து, அவரது முகத்தில் புகையை விட வேண்டும் என வித்யா பாலனிடம் கூறினேன். அதை கேட்டதும் அவர் பயத்தில் நடுங்கிவிட்டார். சிகரெட்டை எடுக்கும்போதே அவரது கைகள் எல்லாம் நடுங்கிவிட்டன.

செய்து முடித்த வித்யா: மேலும் அந்த சிகரெட்டை லிப் ஸ்டிக் பிடிப்பது மாதிரி பிடித்திருந்தார். இதனால் அந்தக் காட்சி இரண்டு டேக்குகள் போயின. அந்தக் காட்சியில் நடிப்பதற்கான தைரியம் அவருக்கு இல்லை என்பது அவரது முகத்திலும், கண்களிலும் தெரிந்தது. பின்னர் எப்படியோ அந்தக் காட்சியை மூன்றாவது டேக்கில் எடுத்து முடித்தேன்" என்றார். முன்னதாக இதுகுறித்து பேசியிருந்த வித்யாவும், "அப்படி நடிப்பதற்கு எனக்கு ரொம்பவே அச்சமாக இருந்தது" என தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த்தின் ஆசை: அதேபோல் அந்த ப்ரோமோஷனில் பேசிய ரஜினிகாந்த், 'வித்யா பாலன் சிறந்த நடிகையாக இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு முழு படத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது' என தெரிவித்தார். இதனைக் கேட்டு ஸ்பாட்டிலேயே நன்றி சொன்ன வித்யா, நெல்சனை கூப்பிட்டு ரஜினி சார் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News