இரண்டாம் திருமணம் செய்ய முடிவு எடுத்த நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

இரண்டாம் திருமணம் செய்ய முடிவு எடுத்த நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

அய்யனார் துணை

விவாகரத்துக்கு பின் சோழனிடம் இருந்து நிலாவை அவருடைய அம்மா, அப்பா அழைத்து சென்றுவிட்டனர். என்னதான் நிலா அங்கிருந்து சென்றிருந்தாலும், சோழன், பாண்டியன், பல்லவன், சேரன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தராக நிலாவை நேரில் சென்று பார்த்து வருகிறார்கள். இது நிலாவின் அப்பா, அம்மாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

இந்த நிலையில், நிலாவை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து செல்ல திட்டம்போடுகிறார்கள். இதனை தெரிந்துகொண்டு, அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார் நிலா. அதுவும் சோழனின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறி மீண்டும் அய்யனார் துணை குடும்பத்திடம் சேர்ந்துவிடுகிறார்.

நிலா எடுத்த அதிரடி முடிவு

இதன்பின், நிலாவை தேடி அவருடைய அம்மாவும் அப்பாவும் அங்கு வருகிறார்கள். நிலாவை கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்து செல்ல முயற்சி செய்கிறார்கள். 'சோழனுடன் வாழ பிடிக்காமல் தான் நீ விவாகரத்து வாங்கினாய், அதன்பின் எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும்' என நிலாவின் தந்தை கூறுகிறார்.

இந்நிலையில், தனது தந்தையின் கையை தட்டிவிட்டு, 'எனக்கு இங்கு இருக்கத்தான் பிடித்துள்ளது, சோழனை விவாகரத்து செய்துவிட்டு இங்கு இருப்பதுதானே உங்களுடைய பிரச்சனை, எனக்கு சோழனை மீண்டும் திருமணம் செய்து வைத்துவிடுங்கள்' என கூறுகிறார் நிலா.

இரண்டாவது முறையாக சோழனை திருமணம் செய்துகொள்ள நிலா எடுத்துள்ள இந்த முடிவை கேட்டு அய்யனார் துணை குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். மறுபக்கம் நிலாவின் அப்பா, அம்மா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES