விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

சிக்மா

முன்னணி நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக சினிமாவில் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என தெரிகிறது, அவர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

ரிலீஸ் தேதி

தெலுங்கு சினிமா நடிகர் சந்தீப் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ஃபஸ்ட் லுக், டீசர் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் வரும் ஜுலை 31ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக இருப்பதாக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளனர்.


LATEST News

Trending News

HOT GALLERIES