நான் நடந்தாலோ, பேசினாலோ அது சாதனை தான்!! கர்வத்தின் உச்சிக்கே சென்ற இசைஞானி..
இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா, கடந்த ஆண்டு ஒரு சிம்பொனியை எழுதி முடித்து லண்டனில் அரங்கேற்றினார். அதனையடுத்து தமிழில் லெனின் பாண்டியன் படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க நேற்று சென்னையில் தன்னுடைய சிம்பொனி இசையை இசைத்து காண்பித்தார். அதில் ஏராளமான ரசிகர்கள், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் எல்லா கலந்து கொண்டு ரசித்தனர்.
அது சாதனை தான்
இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, இது இசை உலகத்தின் சரித்திரத்திலேயே புதிய சரித்திரம். இரு புதிய கலாச்சாரங்கள் வித்தியாசமானது இல்லை என்பதை நிரூபிக்கும் பாடல் இது. சாதனைகளுக்காக, விருதுகளுக்காக காத்திருப்பவன் நான் இல்லை.
நான் நடந்தாலோ, பேசினாலோ சாதனைதான் என்று பேசியிருக்கிறார். இதற்கு அங்கிருந்தவர்கள் அப்படியே கைத்தட்டல்களால் உற்சாகப்படுத்தினார்கள்.