Archana: புடவையில் பேரழகாக மின்னும் பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் போட்டோஷூட்!

Archana: புடவையில் பேரழகாக மின்னும் பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் போட்டோஷூட்!

சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய அர்ச்சனா ரவிச்சந்திரன், தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பூப்போட்ட நீல நிற புடவையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

சன் டிவியில் விஜேவாக அறிமுகமான அர்ச்சனா, பின்னர் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, ஆல்யா மானசாவுக்கு எதிராக அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அர்ச்சனா : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கிய அவர், ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் பின்னர் தனது நேர்மையான பேச்சு மற்றும் தைரியமான அணுகுமுறையால் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதுவரை வைல்டு கார்டாக உள்ளே சென்ற யாரும் டைட்டிலை வெல்லாத நிலையில், அந்த சாதனையை முறியடித்து வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறினார்.

Bigg Boss Archana s Stunning Saree Photoshoot

காதல்: அதே நேரத்தில், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலித்து வருவதாக நீண்டநாளாக தகவல்கள் பரவி வந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண், அர்ச்சனாவின் பிறந்தநாளில் கேமரா முன் நின்று வாழ்த்து தெரிவித்த சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களது நிச்சயதார்த்த போட்டோகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

செம அழகு: நீல நிற டிசைனர் புடவையில் எடுத்துள்ள இந்த புகைப்படங்களில் அர்ச்சனா மிகவும் அழகாகவும், எலிகண்ட்டாகவும் காட்சியளிக்கிறார். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்த போட்டோக்களில் அவரது சிரிப்பும், ஸ்டைலான போஸ்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, முத்து மாலையுடன் எளிமையான மேக்கப்பில் தோன்றியுள்ள அர்ச்சனாவின் லுக் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. "தேவதை போல இருக்கீங்க", "சாரியில் செம்ம அழகு" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய போட்டோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES