மகாபாரதம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா?
மகாபாரதம்
ஸ்டார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2013ம் ஆண்டு மகாபாரதம் என்ற தொடர் எடுக்கப்பட்டது.
இந்த தொடர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் 267 நாள்கள் வரை ஒளிபரப்பாகி இருந்தது.
இந்த பிரம்மாண்ட தொடரை சித்தார்த் ஆனந்த் குமார், அமர்பிரீத், கமல் மோங்கா, லோக்நாத் பாண்டே, முகேஷ்குமார் சிங் என 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.
குட் நியூஸ்
மகாபாரத தொடர் ரசிகர்களுக்கு இப்போது ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது தொடர் வரும் ஜுன் 3 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.