1 லட்சம் சம்பளம்.. மகிழ்ச்சியில் விஜயா.. மீனாவால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. சிறகடிக்க ஆசை சீரியல்
விஜயா எடுத்த படம்
அண்ணாமலையின் வீடு ஜப்தி செய்யப்பட்ட நிலையில், விஜயா தற்போது மீனாவின் வீட்டில் தங்கியுள்ளார். வீட்டை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதற்காக மீனாவும் முத்துவும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில், தான் சொந்தமாக வைத்துள்ள கார் மற்றும் Van-ஐ விற்று ரூ. 10 லட்சம் கட்டி வீட்டை மீட்க முத்து திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், வீட்டில் என்னால் சும்மா இருக்க முடியவில்லை, யாருடைய காசில் நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை என விஜயா கூறினார். இதனால் வேலைக்கு போக முடிவு செய்தார். ஆனால், அண்ணாமலை, முத்து, மீனா என யாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதிர்ச்சியில் விஜயா
இதன்பின், ஒரு இடத்திற்கு வேலை கேட்டு செல்கிறார். அங்கு தனக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் வேண்டும் என விஜயா கேட்க, அதற்கு அங்கு வேலை செய்யும் பெண் 'உங்களுக்கு ரூ. 1 லட்சம் கூட சம்பளம் கிடைக்கும்' என கிண்டல் செய்கிறார். ஆனால், அது தெரியாமல் விஜயா உள்ளே செல்ல, அங்கு அவரை Interview செய்யும் நபராக வருகிறார் மீனா. இந்த ட்விஸ்ட்டை கண்டு அதிர்ச்சியடைகிறார் விஜயா.
இதன்பின், அவருக்கு தெரியவருகிறது இந்த இடத்தில் சம்பளம் கிடையாது, இது ஒரு சமூக சேவை செய்யும் இடம் என தெரிந்து ஏமாற்றமடைகிறார் விஜயா.