நீச்சல் உடையில் ருக்மிணி வசந்த்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

நீச்சல் உடையில் ருக்மிணி வசந்த்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றி இவரை இந்திய அளவில் பிரபலமாக்கிவிட்டது. இதை தொடர்ந்து டாக்சிக் மற்றும் டிராகன் என இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்தபின் இந்திய சினிமாவின் பிஸியான கதாநாயகியாக மாறிவிடுவார் என கூறப்படுகிறது.

நீச்சல் உடையில் ருக்மிணி வசந்த்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை | Rukmini Vasanth Statement For Deepfake Photo

Fake புகைப்படங்கள்

AI மூலம் நடிகைகள் தவறாக சித்தரிக்கப்படும் Fake புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா, தீபிகா, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீலீலா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நீச்சல் உடையில் ருக்மிணி வசந்த்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை | Rukmini Vasanth Statement For Deepfake Photo

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ருக்மிணி வசந்த் நீச்சல் உடையில் இருக்கும்படியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதை பலரும் உண்மையான புகைப்படங்கள் என நம்பிவிட்டனர். ஆனால், அது உண்மையில்லை Fake, AI மூலம் சித்தரிக்கப்பட்டவை என பின் தெரியவந்தது.

ருக்மிணி வசந்த் விளக்கம்

இதுகுறித்து நடிகை ருக்மிணி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார். இதில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றும், இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

நீச்சல் உடையில் ருக்மிணி வசந்த்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை | Rukmini Vasanth Statement For Deepfake Photo

LATEST News

Trending News

HOT GALLERIES