முதலமைச்சர் விஜய்யை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கு.. கோவை சிறுமி விவகாரத்தில் சேரன் கருத்து

முதலமைச்சர் விஜய்யை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கு.. கோவை சிறுமி விவகாரத்தில் சேரன் கருத்து

சென்னை: மொத்த தமிழ்நாடுமே தற்போது மிகவும் கவலையுடன் விவாதித்துக் கொண்டு இருப்பது கோவையைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டது தான். பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் சேரன், இந்த விவகாரத்தில் மட்டும் இல்லாமல் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களை குறை சொலவது சரியானது இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதாவது அவரது எக்ஸ் தளத்தில், " நல்ல யோசிக்க தெரிந்தவர்கள் ஆட்சியை குறை சொல்லமாட்டார்கள் ( யார் ஆட்சியாக இருந்தாலும்).. எதில் இருந்து இந்த குற்றங்கள் உருவாகிறது என யோசிப்பது அவசியம்.. மதுவும் போதையும் இதன் மூலகாரணங்கள்.. மக்களின் அஜாக்கிரதை, பயன்படுத்தும் போனில் உள்ள பலவீனங்கள்... கடுமையான சட்டமின்மையே இதன் பெரும் பலவீனம். இதில் ஆட்சியும், காவல்துறையும் என்ன செய்யும்.. எல்லா வீட்டிலும் காவலர்கள் நிறுத்த முடியுமா...

Cheran Responds to Coimbatore Girl Case Debate Blaming the Chief Minister Vijay Alone Is Not Fair

மக்கள் முதல்வரிடம் வைக்க வேண்டிய கோரிக்கை கடுமையான சட்டத்தை அமல்படுத்த முன்மொழிவதும் குடிமகன்களின் சிந்தனையை சிதறவைக்கும் மதுவையும் போதையையும் அழிப்பதுதான்... எந்த காரணங்களுக்கு நாம் ஆட்சியை குறை சொல்கிறோம் என்ற நேர்மை அவசியம்.. இது திமுக, அதிமுக, நாதக, தவெக எல்லாவற்றிர்கும் சேர்த்துதான்" என்று பதிவிட்டுள்ளார்.

தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார். அதற்கு இணையவாசி ஒருவர், இதையே தான் ஒவ்வொரு தடவையும் சொல்றோம். எத்தனை குழந்தைகளை இழப்பது! இவனெல்லாம் இருப்பது யாருக்கு பயன் என்று பதிவிட்டு, சீமான் மற்றும் சேரன் என இருவரையும் டேக் செய்தார்.

Cheran Responds to Coimbatore Girl Case Debate Blaming the Chief Minister Vijay Alone Is Not Fair

ஆட்சியை குறை சொல்ல மாட்டாங்க: இதையடுத்து, இயக்குநர் சேரன் அதற்கு பதில் அளிக்கும் விதமாக, " நல்ல யோசிக்க தெரிந்தவர்கள் ஆட்சியை குறை சொல்லமாட்டார்கள் ( யார் ஆட்சியாக இருந்தாலும்).. எதில் இருந்து இந்த குற்றங்கள் உருவாகிறது என யோசிப்பது அவசியம்.. மதுவும் போதையும் இதன் மூலகாரணங்கள்.. மக்களின் அஜாக்கிரதை, பயன்படுத்தும் போனில் உள்ள பலவீனங்கள்... கடுமையான சட்டமின்மையே இதன் பெரும் பலவீனம். இதில் ஆட்சியும், காவல்துறையும் என்ன செய்யும்.. எல்லா வீட்டிலும் காவலர்கள் நிறுத்த முடியுமா...

மக்கள் முதல்வரிடம் வைக்க வேண்டிய கோரிக்கை கடுமையான சட்டத்தை அமல்படுத்த முன்மொழிவதும் குடிமகன்களின் சிந்தனையை சிதறவைக்கும் மதுவையும் போதையையும் அழிப்பதுதான்... எந்த காரணங்களுக்கு நாம் ஆட்சியை குறை சொல்கிறோம் என்ற நேர்மை அவசியம்.. இது திமுக, அதிமுக, நாதக, தவெக எல்லாவற்றிர்கும் சேர்த்துதான்" என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES