ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸை சுற்றி சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர்
2023-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு என பலரும் நடித்திருந்தனர்.

ஜெயிலர் 2
ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து 'Ala Bolelo' பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதி
ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக சில சர்ச்சைகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயிலர் 2 வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது; அதில் எந்த மாற்றமும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
