59 வயதில் இது தேவையா? அதீத கவர்ச்சிய உடையில் வந்த பாலிவுட் நடிகை.. விளாசும் ஃபேன்ஸ்!
மும்பை: பாலிவுட் நடிகைகளில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக இருக்கிறார் மாதுரி தீட்சித். 80 மற்றும் 90 கால கட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்த இவர் தற்போது 'மா பெஹன்' என்ற டார்க் காமெடி படத்தில் நடித்துள்ளார். திருப்தி டிம்ரியுடன் இணைந்து நடித்துள்ள இந்த படம் ஜூன் 5ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை மாதுரி தீட்சித் சினிமா நிகழ்ச்சியில் ஒன்றில் படு கவர்ச்சி உடையில் கலந்து கொண்டது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
பத்மஸ்ரீ விருதை பெற்ற நடிகை மாதுரி தீட்சித்திற்கு தற்போது 59 வயதாகிறது. ஷாருக்கான், சல்மான், அஜய் தேவ்கன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து கோலிவுட் சினிமாவிற்கும் தெரிந்த முகமாக இருக்கிறார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட மாதுரி தீட்சித் மிகவும் கவர்ச்சியாக உடை அடைந்து வந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப்பார்த்த பலர் உங்களைபோன்ற வளர்ந்த நடிகைக்கு இதுதேவையா என்றும், 59 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் உங்களுக்கு இதுதேவையா? என கேட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகை: பிரபல நடிகை மாதுரி தீட்சித்தின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், அது உண்மையான வீடியோ அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், இணையத்தில் பரவும் ஒவ்வொரு போட்டோவும் வீடியோவும் கண்மூடித்தனமாக பரப்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரை குறிவைத்து டீப் ஃபேக் வீடியோக்கள் பரவி பெரும் புயலை கிளப்பியது. அது போன்ற ஒரு சர்ச்சையில் தற்போது மாதுரி தீட்சித் சிக்கி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ஏஐ வீடியோ: இதுகுறித்து X (ட்விட்டர்) தளமும் அந்த வீடியோவுக்கு எச்சரிக்கை குறிப்பை இணைத்து, இது AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ. Femina Awards நிகழ்ச்சியில் மாதுரி தீட்சித் அணிந்திருந்தது கருப்பு நிற ஆழமான உடை அல்ல. அவர் ivory mikado gown மற்றும் black off-shoulder drapes உடையில்தான் வந்திருந்தார் என்று விளக்கம் அளித்தது. இந்த வீடியோவை பல இணையவாசிகள் உடனடியாக போலி என கண்டுபிடித்து கண்டனம் தெரிவித்தனர்.