முதலமைச்சராக பதவியேற்றதும் திரிஷாவுடன் விஜய் செல்ஃபி.. அட சூப்பரா இருக்காங்க 2 பேரும்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றிருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் தவெகவின் தொண்டர்கள், விஜய்யின் தந்தை, தாய், திரிஷா, திரிஷாவின் தாய், விஜய் நண்பர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். அவர்கள் அனைவருமே விஜய் சி.எம் ஆவதை ரொம்பவே எமோஷனலாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் நேரு ஸ்டேடியத்துக்குள் திரிஷா என்ட்ரி கொடுத்ததும் அங்கிருந்த ரசிகர்களும், தொண்டர்களும் ஆர்ப்பரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யால் எந்த தொகுதியையும் கைப்பற்ற முடியாது என்பதுதான் முதலில் எல்லோரது கருத்தும். ஆனால் காலம் செல்ல செல்ல அவர் பத்து தொகுதிகளை தாண்டுவதே அதிகம் என்றும் கூறினார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளோ ஒட்டுமொத்தமாக அனைத்து கணிப்புகளையும் அடித்து துவைத்துவிட்டது. விஜய்யின் தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வென்று திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியது.

நீண்ட இழுபறி: 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தன. எனவே நான்காவது முறையாக நேற்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து பெரும்பான்மை கடிதத்தை காண்பித்தார். மேலும் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொண்டதை அடுத்து; அர்லேகரும் நேற்றிரவு விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இதனால் தவெக தொண்டர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள்.
முதலமைச்சராக விஜய்: சூழல் இப்படி இருக்க இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆளுநர் அர்லேகர்; ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் வேலையாக மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதனையடுத்து பேசிய அவர், 'வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். கடந்த அரசு கஜானாவை துடைத்துவிட்டு சென்றிருக்கிறது. 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது' என ஒரே போடாக போட்டார். அதற்கு திமுகவும் ரியாக்ட் செய்ய தொடங்கியிருக்கிறது.
திரிஷாவின் என்ட்ரி: இதற்கிடையே இந்த பதவியேற்பு விழாவில் அனைவரது கவனமும் விஜய்க்கு அடுத்து திரிஷா மீதுதான் இருந்தது. ரிசல்ட் அன்றைக்கே விஜய் வீட்டுக்கு சென்ற அவர்; கண்டிப்பாக இந்த விழாவுக்கு வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே அவரும், அவரது தாய் உமாவும் சேர்ந்து வந்தார்கள். நேரு ஸ்டேடியத்தில் திரிஷா நுழைந்ததும் ரசிகர்களும், தொண்டர்களூம் உச்சக்கட்ட ஆரவாரமடைந்தார்கள். இந்நிலையில் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சூப்பர் செல்ஃபி: அதாவது பதவியேற்பு விழா முடிந்ததும் விதுன் என்பவர் விஜய் மற்றும் திரிஷா ஆகியோரை அருகருகே நிற்க வைத்து செல்ஃபி எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அந்த ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் விஜய் சி.எம். ஆனாலும் திரிஷாவுடன் ஸ்க்ரீனில் இருக்கும் கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக இருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்து அந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்துவருகிறார்கள்.