நடிகை பூஜா ஹெக்டேவா இது, புதிய லுக் வீடியோவை வெளியிட்ட பிரபலம்... இதோ
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
நடிகையாக பூஜா கவனம் பெற்றாலும் அவர் நடித்த முதல் படம் தோல்வியில் முடிந்தது. பின் ஓகா லைலா கோசம் என்ற நாக சைத்தன்யா நடித்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

பின் ஹவுஸ் ஃபுல், அலா வைகுந்தபுரமுலூ என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர் அடுத்தடுத்து நடித்த ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா படங்கள் மூலம் தோல்வியை சந்தித்தார்.
தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.

வீடியோ
தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தவர் ஹிந்தியிலும் சில ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். படங்களை தாண்டி இன்ஸ்டா மூலம் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது நீளமாக இருந்த தனது தலைமுடியை Short Hair ஆக்கியுள்ளார். அந்த வீடியோவை அவர் வெளியிட பூஜாவின் புதிய லுக்கிற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.