Janhvi Kapoor: காதலைச் சொன்ன ஜான்வி கபூர்.. நைட் டிரஸ்ஸுயே எழுதிட்டாங்களேப்பா.. இனி இதுதான் டிரெண்ட!

Janhvi Kapoor: காதலைச் சொன்ன ஜான்வி கபூர்.. நைட் டிரஸ்ஸுயே எழுதிட்டாங்களேப்பா.. இனி இதுதான் டிரெண்ட!

மும்பை: பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஜான்வி கபூர், தனது படங்களை விட சமீப காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருவதோடு, தற்போது தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில், அவர் அணிந்திருந்த ஒரு உடை தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

அதாவது, கடந்த சில ஆண்டுகளாக ஜான்வி கபூரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வது, கோவில்களுக்கு செல்வது, குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற காரணங்களால் இந்த காதல் வதந்தி அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறது.

ஆனால் இதுவரை தங்களது உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகின்றன.

Janhvi Kapoor s Viral Outfit Sparks Fresh Buzz About Her Relationship with Shikhar

காதலர்: இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் ஒரு புகைப்படம் மீண்டும் ஜான்வி மற்றும் ஷிகர் உறவு குறித்த பேச்சுகளை அதிகரித்துள்ளது. அதாவது, ஜான்வி அணிந்திருந்த நைட் சூட்டில் "If Lost, Please Return To Shikhar Pahariya" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, "நான் எங்காவது தொலைந்து போனால், தயவுசெய்து என்னை ஷிகர் பஹாரியாவிடம் ஒப்படையுங்கள்" என்பதே அதன் பொருள்.

இந்த ஒரு வாசகம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. காதலை வெளிப்படையாக அறிவிக்காமல், மறைமுகமாக ஜான்வி தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வெளியாகிய சில நிமிடங்களிலேயே அது வைரலாக பரவியது.

சிக்னல்: இதையடுத்து ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "இது காதல் உறுதியானதற்கான சிக்னல்", "ஷிகர் மீது ஜான்வி வைத்திருக்கும் காதலை காட்ட இந்த ஒரு வாசகமே போதும்", "இவர்கள் திருமணம் செய்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை" என்று கமெண்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

Janhvi Kapoor s Viral Outfit Sparks Fresh Buzz About Her Relationship with Shikhar

முதல்முறையா?: இப்படி இருக்கையில், ஜான்வி இப்படி ஷிகர் மீதான பாசத்தை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் "Shikhu" என்று எழுதப்பட்ட நெக்லஸை அவர் அணிந்திருந்ததும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட விழாக்களிலும் ஷிகர், ஜான்விக்கு துணையாக இருந்த சம்பவங்களும் அடிக்கடி பேசப்பட்டு வந்தன.

இதன் காரணமாக பாலிவுட்டில் இவர்களது திருமணம் குறித்த வதந்திகளும் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆனால் கடந்த காலத்தில் வெளியான திருமண தகவல்களை ஜான்வியின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம், ஜான்வி தனது திரை வாழ்க்கையிலும் செம பிஸியாக வலம் வருகிறார். சமீபத்தில் ராம் சரண் நடித்த 'பெத்தி' திரைப்படத்தில் அச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தாலும், ஜான்வியின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES