பொம்பளைய அடக்கி வச்சி தான் சாதியை காப்பாத்தணும்.. விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' டீசர் வெளியானது!

பொம்பளைய அடக்கி வச்சி தான் சாதியை காப்பாத்தணும்.. விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' டீசர் வெளியானது!

சென்னை: இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகி இருக்கும் 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டீசரை இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் நடிகராக மாறினார். அதைத்தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கோடியில் ஒருவன், ரத்தினம், திமிருபிடிச்சவன், கொலை, ஹிட்லர் என அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர், இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். அதைத்தொடர்ந்து தயாரிப்பாளராக களமிறங்கி மார்கன், பூக்கி போன்ற படத்தை தயாரித்தார்.

விஜய் ஆண்டனியின் நூறு சாமி: தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து இருக்கும் திரைப்படம் 'நூறு சாமி' இந்த திரைப்படத்தை பிரச்சைக்காரன் பட இயக்குநர் சசி இயக்கி உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக விலகி இருந்த இந்த கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டீசர் எப்படி இருக்கு: படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டீசரை இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். டீசர் ஆரம்பிக்கும் போதே பெண் கதறி அழுவது போலவும், சதியை காப்பாத்துவதே பெண்களை வச்சித்தான், அவளுங்களை அடக்கி வச்சித்தான் சதியை காப்பாற்ற வேண்டி இருக்கு என்கிற வசனமும், அந்த பொம்பளையால் ஊரு மானமே அவுத்துக்கிட்டு ஆடுது போன்ற வசனமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பா ரஞ்சித் வாழ்த்து: இந்த டீசரை வெளியிட்டு இருக்கும் பா ரஞ்சித், உணர்ச்சிகள் நிறைந்த நூறு சாமி படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சுவாசிகா, விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷான் என மிகவும் சுவாரஸ்யமான நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட திரைப்படம் இது. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான சசி ஐயா அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த டீசர் இணையத்தில் டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES