கருப்பு படம் பார்த்த ரசிகருக்குள் கருப்பன் இறங்கிட்டானா?.. தியேட்டரில் அருள் வந்து ஆடுறாரே

கருப்பு படம் பார்த்த ரசிகருக்குள் கருப்பன் இறங்கிட்டானா?.. தியேட்டரில் அருள் வந்து ஆடுறாரே

சென்னை: இணையத்துக்குள் எங்கு நுழைந்தாலும் கருப்பு படம் குறித்த வெற்றிக் கொண்டாட்ட பதிவுகள் தான். அதுவும் ஒரு படம் தோல்வியை சந்தித்து அடுத்த படம் ஹிட் கொடுத்தால் இந்த வெற்றி வழக்கமான வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் சூர்யாவுக்கு இந்த தியேட்டரிக்கல் வெற்றி என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த வெற்றி. சூர்யா என்றால் தோல்விப் படம் சுமாரான படம் தான் கொடுப்பார் என்று உலா வந்து கொண்டு இருந்த பேச்சுக்களை எல்லாம் மொத்தமாக அடித்து தவிடு பொடி ஆக்கி உள்ளது கருப்பு. கருப்பா நீ கூட நின்னு ஜெயிச்சு கொடுத்துட்ட என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசை. எல்லைச்சாமி கருப்பனாக சூர்யா வரும் காட்சிகளில் எல்லாம் அந்த கருப்பனே திரையில் வந்து ஆடுவது போல மிரட்டி விட்டுவிட்டார். பொதுவாகவே கடவுள் காட்சிகள் மிகவும் ஆக்ரோஷமாக வரும் படங்களை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களில் சிலர் அந்த கடவுளை நினைத்து அருள் வந்து ஆடுவதை பல முறை பார்த்திருக்கிறோம். கடைசியாக கூட காந்தா படத்தின் இரண்டாவது பாகம் வெளியான போது கர்நாடகாவில் பலரும் அருள் வந்து ஆடியதும், அவர்களை சக ரசிகர்கள் சாந்தப்படுத்தியதையும் பார்த்தோம்.


Suriya Fans Go Into Frenzy During Karuppu Screening Viral Theatre Video Sparks Massive Buzz

அருள் வந்து ஆடிய ரசிகர்: நாட்டுப்புற தெய்வங்களை திரையில் பார்க்கையில் அதுவும் ஆக்ரோஷமாக பார்க்கும் போது இறை நம்பிக்கை இல்லாத நபர்களுக்கு கூட புல்லரிக்கும். அப்படி இருக்கையில் இறை நம்பிக்கை கொண்ட ரசிகர்கள் அந்த உணர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து அருள் வந்து ஆடுகிறார்கள். ஏற்கனவே கருப்பன் வரான் வழி மறிக்காதே என்று பாடல் படத்தில் உள்ளது. சாய் அபயங்கர் கருப்பரே வாருமய்யா என்று தீம் மியூசிக் எல்லாம் போட்டு மொத்த படத்தையும் ஜோ ஜோ என்று மாற்றி உள்ளார்.

ஆர்ஜே பாலாஜி நெகிழ்ச்சி: இந்நிலையில் படம் பார்த்த ரசிகர் ஒருவருக்கு அருள் வந்து ஆட, அவரை, உடன் வந்த ரசிகர்கள் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஆர்ஜே பாலாஜி, தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் கருப்பசாமியும் சூர்யாவும் இருப்பது போன்ற ஒரு டிஜிட்டல் ஓவியத்தை பகிர்ந்து, கருப்பா கூட வந்து தெறிக்கவிட்டுடப்பா என்று கேப்ஷனிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES