ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? வம்பிழுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்
குக் வித் கோமாளி 7ம் சீசன் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கியது. தற்போது ஏழு வாரங்கள் நிறைவு பெற்று இருக்கிறது.
இந்த முறை போட்டியாளர்கள் கணவன் மனைவியாக தான் கலந்துகொள்கிறார்கள். இதுவரை இரண்டு ஜோடி எலிமினேட் ஆகியுள்ள நிலையில் இன்னும் 7 ஜோடிகள் ஷோவில் இருக்கிறார்கள்.
CWC 7 ஷோவின் நடுவராக நடிகை ரோஜாவை கொண்டு வந்திருக்கின்றனர். அதை தற்போது வனிதா விஜயகுமார் விமர்சித்து இருக்கிறார்.

என்ன தகுதி இருக்கு?
"ரோஜா என் பிரென்ட் தான். ஆனால் அந்த நடுவர் இருக்கையில் அமர என்ன தகுதி இருக்கு என்கிற கேள்வி இருக்கிறது."
"செஃப் தாமுவுக்கு பிறகு அந்த சீட்டில் அமர தகுதியானவர் நான் தான்" என வனிதா பேட்டி அளித்திருக்கிறார்.
