தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.. திரிஷாவுக்கு குவியும் ஆஃபர்கள் இதுவா?.. என்ன நடக்குது?
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ரொம்பவே ஃபேவரைட். இரண்டு பேரும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்துவைத்து ஒருதரப்பினர் கிசுகிசு பரப்பிய சூழலில்; தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் திரிஷா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாகவும், சிம்ரன் ஹீரோயினாகவும் நடித்த படம் திரிஷா. அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் தலை காட்டியவர் திரிஷா. கடந்த பல வருடங்களாகவே அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக இருக்கிறார். அதிலும் விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் முதன்முறையாக அவர் சேர்ந்து நடித்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்தார்கள்.

பல வருடங்கள் கழித்து: அந்தப் படங்களில் குருவி, ஆதி தவிர்த்து மற்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அதேசமயம் அவர்கள் தொடர்ந்து நடித்ததை வைத்து திரைத்துறையில் கிசுகிசுக்களும் கிளம்பின. அதன் காரணமாக அவர்கள் சேர்ந்து நடிப்பதை நிறுத்தியிருந்தார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடித்தார்கள்.
மீண்டும் கிசுகிசு: நீண்ட வருடங்கள் கழித்து சேர்ந்து நடித்த அந்த ஜோடியை வழக்கம்போல் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேசமயம் அவர்களை இணைத்து மீண்டும் பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளுக்கு லிஃப்ட்டில் அவருடன் இருந்த புகைப்படம், இரண்டு பேரும் பனி மலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் திரிஷாவும், விஜய்யும் மீண்டும் ஹெட்லைன்ஸ் ஆனார்கள். மேலும் அந்தப் புகைப்படங்களை வைத்து வைத்து பலரும் பல விதமாக பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்தும் தாக்கல் செய்திருந்தார்.
முதலமைச்சர் விஜய்; திரிஷாவுக்கு ஆஃபர்கள்?: அந்தப் பிரச்னைகள் எல்லாம் பற்றி எரிந்த சூழலிலேயே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் வென்று முதலமைச்சராகவும் பதவியேற்றார். அந்த விழாவுக்கு திரிஷாவும் வந்திருந்தார். இந்நிலையில் திரிஷா குறித்து புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது ஏற்கனவே திரிஷாவுக்கு ஏகப்பட்ட விளம்பர பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது மேலும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது அம்பாசடராக மாற்றுவதற்கு பல முயற்சிகள் நடந்துவருவதாகவும்; திரிஷாவும் கவனத்தோடு அதை தேர்ந்தெடுக்கிறார் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.