கடற்கரையில் பக்காவா போஸ் கொடுத்த ஷெரின்.. அந்த போஸ் மட்டும் வித்தியாசம்!

கடற்கரையில் பக்காவா போஸ் கொடுத்த ஷெரின்.. அந்த போஸ் மட்டும் வித்தியாசம்!

சென்னை: நடிகை ஷெரினுக்கு தற்போது பட வாய்ப்பு இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். தற்போது கடற்கரையில் காத்து வாங்கும் போட்டோவை ஷெரின் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் தான் ஷெரின். அந்த படத்திற்கு பிறகு விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, பூவா தலையா,ஸ்டூடண்ட் நம்பர் ஒன், யோகி ஆகிய படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு இவருக்கு எந்த படமும் அமையவில்லை. இதனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படவாய்ப்பை பெற நினைத்தார் ஷெரின். ஆனால், அந்த நிகழ்ச்சியில் இவர் வெற்ற பெற முடிவில்லை என்றாலும், உடல் எடை அதிகரித்து வந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு போகும் உடல் எடை குறைந்து சிக்கென்று சென்றார்.

Sherin photos instagram

நடிகை ஷெரின்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபல ஷெரின் நண்பேண்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு படவாய்ப்பு எதுவும் அமையாததால் மீண்டும், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விதவிதமாக சமைத்தார். அந்த நிகழ்ச்சியில் புகழும் ஷெரினும் சேர்ந்து செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருந்ததால், இந்த நிகழ்ச்சி ஷெரினுக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

Sherin photos instagram

குவியும் லைக்குகள்: தற்போது சினிமாவில் பெரிதாக ஆக்டிவாக இல்லாத ஷெரின் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் நீல நிற உடையில் இருக்கும் போட்டோ கண்ணை பறிக்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படங்களில் நீல நிற ஹார்ட் டிசைன் உடையில் கடற்கரையில் செம்ம குளிர்ச்சியான லுக்கில் ஷெரின் போஸ் கொடுத்துள்ளார். இயற்கை அழகோடு சேர்ந்து ஷெரினின் ஸ்மைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் கமெண்ட் செய்து போட்டோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES