ரம்பாவின் மகன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரா? வெளிப்படையாக பேசிய நடிகை
நடிகை ரம்பா
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், திடீரென சினிமாவிலிருந்து விலகினார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது.

சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் தற்போது நடுவராக ரம்பா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்பா - விஜய்
நடிகை ரம்பா பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதில் விஜய்யுடன் இணைந்து மின்சார கனவு, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது மகன், நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் என பேசியுள்ளார்.
இதில், "என் மகன் 5 வருஷமா விஜய்யின் பெரிய ரசிகனா இருந்தான். நான் விஜய் கூட நடிச்சது அவனுக்கு தெரியாது. ஒரு தடவை என் கணவர் அவன்கிட்ட வந்து, 'டேய் உங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்க, உனக்கு தெரியுமா'ன்னு கேட்டாரு. உடனே அவன் அதிர்ச்சியாகிட்டான். அன்று முழுக்க என்கிட்டே கேட்டுக்கிட்டே இருந்தான், அதன்பின் ஒரு நாள் விஜய் சார்கிட்ட கேட்டுட்டு என் படங்களை கூட்டிக்கிட்டு போய் அவரை மீட் பண்ணுனேன்" என கூறியுள்ளார்.