மாதம்பாட்டியின் மன்மத லீலை.. ச்சைக்.. கன்றாவி.. புது வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா.. வைரலாகும் காட்சி..
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி மற்றும் ஏமாற்றுதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவை "பொண்டாட்டி" என அழைத்து கொஞ்சலாக பேசுவது தெரிகிறது. "மிஸ் யூ சாரி, கொஞ்சம் பொசசிவ்னஸ்ல கொஞ்சம் பேசிட்டேன். மன்னிச்சிரு. லவ் யூ. இனிமே இப்படி நடந்துக்க மாட்டான். இங்க பாரு.. இங்க பாரு.." எனக் கூறியபடி டாப் ஆங்கிளில் கேமராவை நோக்கி காட்டக்கூடாத பகுதிகளை காட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், "மிஸ் யூ. சரி கிளம்புறேன். ஹாப்பியா இரு.." என முடித்து வீடியோவை அனுப்பியுள்ளார் ரங்கராஜ்.
இந்த வீடியோவை வெளியிட்டு, மாதம்பட்டி ரங்கராஜின் பெயரை "மதம் கொண்ட யானை போல சின்னாபின்னமாக்கி" வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜாய் கிரிசில்டா தொடர்ந்து இதுபோன்ற தனிப்பட்ட வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருவதால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜாய் கிரிசில்டாவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஜாய் கர்ப்பமானதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், பின்னர் ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மகளிர் ஆணையம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தார். கருவைக் கலைக்க தூண்டியதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடியாக, ரங்கராஜ் தரப்பில் ஜாய் கிரிசில்டா அவதூறு பரப்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது கேட்டரிங் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. சில வழக்குகளில் ஜாய் தரப்புக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்த நிலையில், விவகாரம் தொடர்ந்து நீதிமன்றம் மற்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஜாய் கிரிசில்டா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், சமீபத்தில் மகனுடன் கோயம்புத்தூர் சென்றது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ரங்கராஜ் தரப்பு மிரட்டலால் திருமணம் நடந்ததாக கூறி மறுத்து வரும் நிலையில், ஜாய் தொடர்ந்து ஆதாரங்களை வெளியிட்டு போராடி வருகிறார்.
இந்த விவகாரம் தமிழ் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இரு தரப்பையும் விமர்சித்து வரும் நிலையில், விரைவில் நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைக்குமா என அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர்.