ஜனவரி 9-ந் தேதி தியேட்டரைவிட ஓடிடியில் தான் அதிக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் - முழு லிஸ்ட் இதோ
பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், ஓடிடியில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகை என்றாலே தொடர் விடுமுறை வரும் என்பதால் அந்த சமயத்தில் திரையரங்குகள் போட்டிபோட்டு படங்கள் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வருகிறது. அதற்கு போட்டியாக பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படமான ராஜா சாப் ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுதவிர சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
மாஸ்க்
ஒரு தனியார் துப்பறிவாளரின் வாழ்க்கையில் சிக்கும் அரசியல் குற்றங்கள் மற்றும் மோசடிகளின் வலை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் ஒரு முகம் இருக்கிறது. இப்படம் ஜனவரி 9 முதல் ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.
ஃப்ரீடம் அட் மிட்நைட் – சீசன் 2
இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நடந்த அரசியல், சமூக மோதல்களை மனிதநேயக் கோணத்தில் காட்டும் வரலாற்றுத் தொடர். இது சோனி லிவ் ஓடிடியில் ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஹனிமூன் சே ஹத்யா
நிஜ வாழ்க்கைக் கொலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ட்ரூ க்ரைம் டாக்குமெண்டரி. திருமண பந்தத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் மனதின் இருண்ட பக்கங்களை இது வெளிப்படுத்துகிறது. இப்படம் ஜனவரி 9 முதல் ஜீ5-ல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
பால்டி
கபடி வீரர்களின் வாழ்க்கையில் குற்ற உலகம் நுழையும்போது நிலைமை எப்படி மாறும்? நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றைச் சுற்றி சுழலும் ஒரு ரஃப் ஆக்சன் த்ரில்லர். இது ஜனவரி 9ந் தேதி முதல் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
தே தே பியார் தே 2
வயது வித்தியாசத்துடன் காதலிக்கும் ஆஷிஷ் - ஆயிஷாவின் கதை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இம்முறை ஆயிஷாவின் குடும்பத்தை சம்மதிக்க வைக்கும் சவால். குடும்ப மதிப்புகள், இரட்டை நிலைப்பாடுகள் குறித்து இப்படம் கேள்வி எழுப்புகிறது. இதில் ரகுல் ப்ரீத் சிங், அஜய் தேவ்கன், டபு நடித்துள்ளனர். இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஹிஸ் அண்ட் ஹர்ஸ்
ஒரு கொலை வழக்கு... இரு தம்பதிகள்... இருவரின் வெவ்வேறு கதைகள். யார் உண்மை சொல்கிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள்? என்ற சந்தேகங்களுடன் நகரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 8ந் தேதி வெளியாகிறது.
அங்கம்மாள்
சமூகத்தின் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை எதிர்க்கும் ஒரு பெண்ணின் கதை. தலைமுறை மாற்றங்கள் மற்றும் குடும்ப மோதல்கள் பற்றிய ஆழமான படம். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஜனவரி 9 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
பீப்பிள் வீ மீட் ஆன் வெக்கேஷன்
பத்து வருட நட்பு, பயணங்கள், சொல்லப்படாத உணர்வுகள் காதலாக மாறினால் என்னவாகும்? டைம்-ஜம்ப் கதைக்களத்துடன் கூடிய மனதை வருடும் ரொமான்டிக் டிராமா. இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 9ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
எ தௌசண்ட் ப்ளோஸ் – சீசன் 2
முதல் சீசனின் பேரழிவுகரமான நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து கதை தொடங்குகிறது. ஹீஜெகியா மாஸ்கோவின் வாழ்க்கை இருளில் மூழ்குகிறது. லண்டன் ஈஸ்ட் எண்டின் நிழல் உலகமே கதைக்களம். இந்த வெப் தொடர் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜனவரி 9ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தி நைட் மேனேஜர் – சீசன் 2
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜொனாதன் பைன் மீண்டும் உளவு உலகில் நுழைகிறார். சர்வதேச ஆயுத வர்த்தகம் மற்றும் அரசியல் சதித்திட்டங்களே கதைக்கு உயிர்நாடி. இந்த வெப் தொடர் ஜனவரி 11ந் தேதி முதல் பிரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Image Credit : stockPhoto
பிற மொழி ஓடிடி ரிலீஸ்
அகண்டா 2 – தாண்டவம்
நந்தமுரி பாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அதிரடி ஆக்சன் படம் அகண்டா 2. ஆன்மீக கூறுகள் கொண்ட இக்கதையில், பாலகிருஷ்ணா அகோரியாக அகண்டா வேடத்தில் நடித்துள்ளார். டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான இப்படம், ஜனவரி 9 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 9ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தி பிட் – சீசன் 2
பிட்ஸ்பர்க் ட்ராமா மருத்துவ மையத்தில் ஒரே ஒரு ஷிப்டை மையமாகக் கொண்ட உயர் பதட்ட மருத்துவ டிராமா இது. சைபர் தாக்குதல், அவசரநிலைகள், மருத்துவர்களின் தனிப்பட்ட போராட்டங்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்தும். இந்த வெப் தொடரும் ஜியோஹாட்ஸ்டாரில் ஜனவரி 9ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
வெப்பன்ஸ்
ஒரு சிறிய நகரத்தில் ஒரே நேரத்தில் 17 குழந்தைகள் காணாமல் போவது பரபரப்பை ஏற்படுத்துகிறது. விசாரணை தொடரும்போது மூடநம்பிக்கைகள், அமானுஷ்ய சக்திகள் வெளிப்படுகின்றன. இந்த ஹாரர்-மிஸ்டரி படம் இறுதிவரை பதற்றத்தை தக்கவைக்கிறது. இப்படம் ஜனவரி 8ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.