சீரியல் நடிகை ராணியிடம் லட்சக்கணக்கில் நகை பணம் இழந்த கரூர் தொழில் அதிபர்! சீரியலை மிஞ்சும் உண்மை கதை!
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சீரியல் நடிகை ராணி, மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கரூர் ஹோட்டல் அதிபர் தினேஷ் ராஜிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், BMW கார், 5 சவரன் நகை ஆகியவற்றை ஏமாற்றி வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பேரில் நடிகை ராணி, அவரது கணவர் பாலமுருகன் பாலாஜி மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது கரூர் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை ராணி, ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
திருமணத்துக்குப் பின் தெலுங்கு சீரியல்கள் மூலம் மீண்டும் நுழைந்து, தமிழில் 'சிகரம்', 'அலைகள்', 'சொந்தம்', 'அத்திப்பூக்கள்', 'வள்ளி' உள்ளிட்ட பல தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கரூர் மாநகரில் ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ், தனது மனைவியுடனான குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க சாதி அமைப்புத் தலைவரின் உதவியை நாடினார்.
அப்போது நடந்த பஞ்சாயத்து பேச்சுவார்த்தையில் நடிகை ராணியும் அவரது கணவரும் பங்கேற்றனர். இதன்மூலம் தினேஷ் ராஜுக்கும் ராணிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு உருவான நிலையில், தினேஷ் ராஜ் ராணிக்கு பணம், நகை, BMW கார் உள்ளிட்டவற்றை வாரி வழங்கினார்.
ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராணி தொடர்பைத் துண்டித்தார். இதனால் ஏமாற்றப்பட்டதாகக் கருதிய தினேஷ் ராஜ், கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நடிகை ராணியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
தற்போது நடிகை ராணி உள்ளிட்ட மூவரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.