“உன் புருஷனை விட்டு என்னுடன் வரமுடியுமா?” பத்த வைத்த பிரபல இளம் நடிகை! வசமாக சிக்கிய சென்னை தொழிலதிபர்!

“உன் புருஷனை விட்டு என்னுடன் வரமுடியுமா?” பத்த வைத்த பிரபல இளம் நடிகை! வசமாக சிக்கிய சென்னை தொழிலதிபர்!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சனா அல்தாப், தனக்கு தொடர்ச்சியாக அநாகரீக மின்னஞ்சல்கள் அனுப்பிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை சமூக வலைதளத்தில் துணிச்சலாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, பெண் பிரபலங்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் தொல்லைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த சனா அல்தாப், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். 2014ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்த 'விக்ரமாதித்யன்' திரைப்படத்தில் அவரது சகோதரி வேடத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு 'மரியம் முக்கு', 'ராணி பத்மினி', 'ஒடியன்' உள்ளிட்ட மலையாள படங்களிலும், தமிழில் 'சென்னை 28 II: செகண்ட் இன்னிங்ஸ்', 'ஆர்.கே. நகர்', 'பஞ்சராக்ஷரம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடிகர் ஹக்கீம் ஷாஜகானை திருமணம் செய்து கொண்ட சனா, தற்போது குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த என். பாலாஜி என்ற தொழிலதிபர், சனா அல்தாபுக்கு செப்டம்பர் 29 முதல் டிசம்பர் 26 வரை மூன்று முறை மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளார்.

அந்த மின்னஞ்சல்களில், "அன்புள்ள சனா, எப்படி இருக்கிறீர்கள்? நான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி. உங்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம். இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்லுங்கள். எப்போது வர முடியும் என்று தெரிவியுங்கள். மாலத்தீவு அல்லது துபாய்க்கு செல்லலாம்" என வெளிப்படையாக அநாகரீக ஆஃபர் விடுத்துள்ளார்.

இந்த தொடர் தொல்லைகளால் மன உளைச்சல் அடைந்த சனா அல்தாப், அந்த மின்னஞ்சல்களின் ஸ்கிரீன் ஷாட்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதனுடன், "வாவ்... எவ்வளவு ப்ரொஃபெஷனல் ரொமான்டிக் ப்ரொபோசல்!" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "சினிமாவில் சிறு வேடம் முதல் நாயகி வரை, நடிகைகளுக்கு 'அட்ஜஸ்ட்மென்ட்' என்ற பெயரில் தொல்லை தொடர்கிறது.

திருமணமானவர்களுக்குக்கூட இது நிற்பதில்லை" என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பெண் பிரபலங்கள் ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடரும் பிரச்னையாக உள்ளதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதுவரை இந்த தொழிலதிபர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், இது போன்ற சம்பவங்கள் சைபர் கிரைம் புகாராக பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

LATEST News

Trending News