ரிலீஸுக்கு முன் பல கோடி லாபம் கொடுத்துள்ள ஜனநாயகன்.. பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
விஜய்யின் படம் என்றாலே பிசினஸ் வேற லெவலில் நடக்கும். அதுவும் அவருக்கு கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

ஆம், ஜனநாயகன் படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் நடந்து ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு மாபெரும் தொகை லாபமாக கிடைத்துள்ளது.
ஜனநாயகம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 352.60 கோடி. இப்படத்தை ரூ. 452 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளனர்.

இதன்மூலம் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ. 99.40 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்த பிசினஸ் விவரங்களை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.