ரெட் கார்ட் வாங்கியும் திருந்தாத பார்வதி, திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் செம பீக் ஆனது. இதற்கு முக்கிய காரணம் பார்வதி, கம்ரூதின் கார் டாஸ்கில் சாண்ட்ராவை எட்டி உதைத்து தள்ளி விட்டது தான்.
இதை பார்த்த எல்லோரும் பார்வதி மேல் கடுங்கோபம் கொண்டார்கள். அதை தொடர்ந்து விஜய் சேதுபதி கடுமையாக திட்டி ரெட் கார்ட் கொடுத்தார்.

இந்நிலையில் வெளியே வந்த பார்வதி திருந்துவார் என்று பார்த்தால், தன் மீது தவறில்லை, TRP ஆக தான் இப்படி செய்தார்கள், சாண்ட்ரா நடித்தார் என வரும் போஸ்டை எல்லாம் இன்ஸ்டாவில் பார்வதி ஷேர் செய்து வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவர் திருந்தமாட்டார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.