பக்கத்துல வராதீங்க..தள்ளி நில்லுங்கன்னு சொன்ன ஷாலினி!! மாதவன் கொடுத்த பதில்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார் ஷாலினி.

நடிகை அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷாலினி, இரு குழந்தைகளுக்கு தாயாகி சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வரும் கணவர் அஜித் குமாருக்கு ஆதரவாக பல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி குறித்து பிரபல நடிகர் மாதவன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், ஷாலினி எப்ப என்னை பார்த்தாலும், இதோ பாரு, நான் அஜித்தை கல்யாணம் பண்ணிக்கப்போறேன். நீங்க ரொம்ப ரொமான்டிக் சீன் எல்லாம் பண்ணாதீங்க. அருகில் வராதீங்க, தள்ளியே நில்லுங்கன்னு நிறைய சொல்லுவாங்க.

நானும் இதோ பாருங்க, நானும் கல்யாணம் பணிக்கப்போறேன், நீங்க அருகில் வராதீங்கன்னு சொல்லுவேன். ஆனால் அவங்க சொன்னது ரொம்ப எமோஷனலா இருக்கும் என்று மாதவன் தெரிவித்துள்ளார்.