அதைவிட பணமா முக்கியம்..திருப்பி கொடுங்க!! சின்மயிக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்..

அதைவிட பணமா முக்கியம்..திருப்பி கொடுங்க!! சின்மயிக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்..

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் திரெளபதி 2 படம் பான் இந்திய திரைப்படமாக பல மொழிகளில் உருவாகியுள்ளது. இதில், திரெளபதி தேவி ரோலில் ரக்ஷனா இந்து நடித்துள்ளார். ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்ஜி மகேந்திரன், நாடோடிகள் பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதைவிட பணமா முக்கியம்..திருப்பி கொடுங்க!! சின்மயிக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்.. | Director Perarasu Strong Reply To Singer Chinmayi

இந்நிலையில் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையில் சின்மயி எம்கோனே என்ற பாடலை பாட்டியிருந்தார். இப்படம் நேற்று வெளியான நிலையில், பாடகி சின்மயி, எம்கோனே பாடல் பாடியதற்காக எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால், நான் வழக்கம் போல் சென்று பாடினேன்.

அதைவிட பணமா முக்கியம்..திருப்பி கொடுங்க!! சின்மயிக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்.. | Director Perarasu Strong Reply To Singer Chinmayi

மோகன் ஜி படம் என்று தெரிஞ்சிருந்தால் இப்பாடலை பாடியிருக்க மாட்டேன், ஏனென்றால் சித்தாங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாகவுள்ளன என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் சின்மயி. இந்த சம்பவம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் பேரரசு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல சின்மயி அவர்களே, பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம். கொள்கையைவிட பணமா முக்கியம்? இயக்குநர் திரு. மோகன் ஜி அவர்கள் வேறொரு குரலை பதிவு செய்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்று பேரரசு பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News