சம்யுக்தா கணவரின் முதல் திருமணம்!!குடும்பத்துடன் அஜித் கலந்துகொண்ட புகைப்படம் டிரெண்ட்..
நடிகை சம்யுக்தா ஷானுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துக்கும் சில நாட்களுக்கு முன் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது.

சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றவர். அதேபோல் அனிருதாவும் திருமணமாகி விவாகத்து பெற்றவர். 2012ல் மாடல் நடிகையான ஆர்த்தி என்பவரை அனிருதா ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிய இரு வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆர்த்தி - அனிருதா விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்நிலையில் அனிருதாவின் முதல் திருமணத்திற்கு நடிகர் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினி, மகள் அனெளஷ்காவும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி டிரெண்ட்டாகி வருகிறது.

