கீர்த்தி சுரேஷுக்கு இருக்கும் அந்த வினோத பழக்கம்.. கணவர் ரொம்ப பாவம்யா!

கீர்த்தி சுரேஷுக்கு இருக்கும் அந்த வினோத பழக்கம்.. கணவர் ரொம்ப பாவம்யா!

முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக இவர் நடிப்பில் கண்ணிவெடி படம் வெளிவரவுள்ளது. அதே போல் அக்கா என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது. தற்போது, கீர்த்தி நடிப்பில் ரிவால்வர் ரீட்டா என்ற படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கீர்த்தி அவருக்கு இருக்கும் வினோத பழக்கம் குறித்தும்; அதற்கு தன்னுடைய கணவரின் ரியாக்‌ஷன் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அதில், " விமானத்தில் நானும் எனது கணவரும் பயணம் செய்துகொண்டிருக்கும்போது நான் என்னிடமே பேசிக்கொண்டிருப்பேன். அப்போது அவர் என்னை ஒருமாதிரி பார்த்து யாரிடம் பேசிக்கொண்டு இருக்க என்று கேட்பார்.

கீர்த்தி சுரேஷுக்கு இருக்கும் அந்த வினோத பழக்கம்.. கணவர் ரொம்ப பாவம்யா! | Keerthy About Her Different Activity Details

அதற்கு, ஒரு சீனில் இப்படி நடிக்கலாமா அப்படி நடிக்கலாமா என்று யோசித்து பேசிக்கொண்டிருப்பேன். அதுமட்டுமின்றி கடந்த மூன்று நான்கு வருடங்களாக ஒரு கதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதிலும் ஒரு ஆர்வம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.  

LATEST News

Trending News