அந்த படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன்.. நடிகை அமலா பால் ஓபன் டாக்

அந்த படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன்.. நடிகை அமலா பால் ஓபன் டாக்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின், 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார்.

அந்த படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன்.. நடிகை அமலா பால் ஓபன் டாக் | Amala Paul Talk About Wrong Movie Decision

முன்னதாக அமலா பால் தனது முதல் படம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமலா பால் நடித்த சிந்து சமவெளி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது: " சிந்து சமவெளி படத்தில் நடித்து நான் தவறு செய்துவிட்டேன். அப்போது எனக்கு 17 வயது தான். இனி நான் ஒருபோதும் அத்தகைய வேடத்தில் நடிக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டேன். நான் மிகவும் பயந்தேன், அதற்கு எதிர்மறையான கருத்துகள் வந்தன. படத்தைப் பார்த்த பின் என் தந்தையும் சோகமாக இருந்தார். இந்தப் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்தது" என கூறியுள்ளார்.  

LATEST News

Trending News