இப்படி செய்தால் மெலிந்து விடுமா!! கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கம் சென்று பிரபலமான நடிகை சமந்தா, நடிப்பை தாண்டி பல தொழில்களிலும் ஈடுபட்டு சம்பாதித்து வருகிறார்.

மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா, அதற்கான சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட்டின் போது ஜிம் கோச்சுடன் எடுத்த முரட்டுத்தனமான ஒர்க்கவுட் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் சில கலாய்த்தபடி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகர், இப்படி செய்தால் உங்கள் உடல் ரொம்ப மெலிந்து விடுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனையறிந்த நடிகை சமந்தா, ’எப்போதாவது உங்கள் அறிவுரை தேவைப்பட்டால் நான் கேட்கிறேன்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.