ரூ. 50 ஆயிரம் தூக்கிக் கொடுத்த விஜய் சேதுபதி, யாருக்கு? இந்த மனசு தான் கடவுள்!

ரூ. 50 ஆயிரம் தூக்கிக் கொடுத்த விஜய் சேதுபதி, யாருக்கு? இந்த மனசு தான் கடவுள்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர், இந்த ஆண்டு தலைவன் தலைவி படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார்.

ஒரு பக்கம் சினிமாவில் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் விஜய் டிவியின் பிக்பாஸ் 9வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் 7 வாரங்கள் நிறைவடைந்துவிட்டது. இதில் 7வது வாரத்தில் போட்டியாளர் கெமி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

ரூ. 50 ஆயிரம் தூக்கிக் கொடுத்த விஜய் சேதுபதி, யாருக்கு? இந்த மனசு தான் கடவுள்! | Vijay Sethupathi Help Details Goes Viral

இந்நிலையில், விஜய் சேதுபதி செய்த உதவி குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது, விஜய் சேதுபதி படகில் ஒரு முறை ஷூட்டிங் வந்திருந்தார். ஷூட் முடிந்த பின் படகில் அக்கரைக்கு சென்றிருந்தார். அப்போது அந்த படகு ஊட்டும் நபரிடம் இந்த படகு உங்களுடையதா என்று கேட்டுள்ளார்.

இல்லை என்று கூற, இதை சொந்தமாக வாங்க எவ்வளவு செலவாகும்? என்று கேட்டுள்ளார். ஐம்பதாயிரம் ரூபாய் என்று அந்த படகு ஓட்டுநர் கூறியவுடன் அந்த இடத்தில் ரூ. 50 ஆயிரம் காசோலை எழுதி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.   

LATEST News

Trending News