ஸ்மிருதி மந்தனா - பாலேஷ் திருமணம் தள்ளி வைப்பு!! காரணம் இதுதான்..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பையை வென்றுள்ள நிகழ்வை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி வருந்தனர்.

இந்த உற்சாகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா தன்னுடைய காதலர் பாலேஷ் முச்சல் என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் புகைப்படங்களும் வெளியானது. இன்று நவம்பர் 23 ஆம் தேதி ஸ்மிருதி - பாலேஷின் திருமணம் நடக்கவிருந்தது.
திருமணத்திற்கு முந்தின மெஹந்தி கொண்டாட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஸ்மிருதி மந்தனாவுடன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணத்தை ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.