விஷயம் தெரியாமல் பேசாதீங்க.. சர்ச்சையை முடித்து வைத்த மான்யா- வைரலாகும் காணொளி
தனுஷ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது என பேட்டிக் கொடுத்த மான்யாவிற்கு எதிராக எழுந்த சர்ச்சையை முடித்து வைக்கும் விதமாக வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வானத்தைப் போல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மான்யா ஆனந்த்.
இவர், நடிப்பில் ஒளிபரப்பாகிய வானத்தை போல சீரியல், பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக ஓடியது. அதன் பின்னர், அன்னம், மருமகள் போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

மான்யா ஆனந்த் சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் இணையவாசிகள் மத்தியில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், பேட்டியில் நடிகர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விடயங்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு நடிகர்களின் பெயர்களும் ஒவ்வொன்றாக பேசப்பட்டது.
அப்போது தனுஷ் குறித்து பேசிய மானியா, “வாய்ப்பு தருவதாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. தனுஷ் உடன் கமிட்மெண்ட் இருக்கும் என்றார். உடனே அவர் அதற்கு நான் அப்படியான படங்களில் நடிப்பது இல்லை. இது குறித்து தனுஷ் உடன் நடித்த ஒரு நடிகையிடம் கேட்டேன். அவர் அதற்கு இந்த விடயம் தனுஷ் அவர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம் என்றார்.

மேலும், இது போன்ற மோசடி அழைப்புக்கள் அதிகமான நடிகைகளுக்கு வருகிறது. இதனை யார் செய்தாலும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என பேசியிருந்தார். குறித்த பேட்டி காணொளி இணையவாசிகள் மத்தியில் வைரலாகி விட்டது. இதனால் மான்யாவிற்கு பலதரப்பில் கருத்துக்கள் குவிந்து வருகிறது.
இதற்கெல்லாம் முடிவுக்கட்ட நினைத்த மான்யா, “ நான் நீங்கள் கருத்துக்களை பகிர்வது போன்று கூறவில்லை. நான் பேசியதை முழுமையாக பார்த்து விட்டு செய்திகளை பரப்புங்கள். தவறான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம். இந்த சர்ச்சைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன்..” என காணொளி பேசி வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.