பிரபல நடிகர் இறந்ததாக வெளியான வதந்தி... வருத்தத்தில் குடும்பம்
பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தர்மேந்திரா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதனால் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்த நிலையில் அவர் நலமுடன் உள்ளார், தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என தர்மேந்திரா குடும்பத்தினர் பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
