சீரியல் முடிந்த கையோடு தொழிலை மாற்றிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்- என்ன செய்கிறார்கள் பாருங்க
சீரியல் முடிந்த கையோடு பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் நடிப்பை விடுத்து வேறு வேலைச் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி நிறைவுக்கு வந்த சீரியல் தான் பாக்கிலட்சுமி.
கணவர் இல்லாமல் சமூகத்தில் உள்ள பெண்கள் படும் அவஸ்தையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியலில் பாக்கியா முக்கிய கதாபாத்திரமாக இருந்தது.
1000 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

சீரியலில் எவ்வளவு கதாபாத்திரம் வந்தாலும் பாக்கியா - கோபிக்கு இணையாக யாரையும் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை.
இந்த நிலையில், சீரியலில் இனியா திருமணம் முடிந்தவுடன் நிறைவிற்கு வந்தது. சீரியல் முடிந்தவுடன் சிலர் வேறு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இவர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இனியா மற்றும் அமிர்தா இருவரும் சேர்ந்து அழகு கலையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இரவு முழுவதும் அமர்ந்து மணப்பெண்ணிற்கு மேக்கப் போடும் காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீரியல் இல்லாவிட்டாலும் இவர்களின் இந்த முயற்சியை சின்னத்திரை ரசிகர்கள் ஆதரிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.