ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 40 லட்சம், மிஸ் யூனிவர்ஸ்.. யார் இந்த பிரபல நடிகை?

ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 40 லட்சம், மிஸ் யூனிவர்ஸ்.. யார் இந்த பிரபல நடிகை?

2010-ம் ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை பெற்றவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.

சில படங்களில் மட்டுமே நடித்தாலும், அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

அவர் வேறு யாருமில்லை, நடிகை பூஜா ஹெக்டே தான். இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதன்பின் தனது கவனத்தை தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திருப்பிய பூஜா, தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்த பூஜா, பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார்.

ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 40 லட்சம், மிஸ் யூனிவர்ஸ்.. யார் இந்த பிரபல நடிகை? | Actress Pooja Net Worth Salary Details

மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவர் மும்பையில் 4 ஆயிரம் சதுர அடியில் ரூ.45 கோடி மதிப்புள்ள பிரமாண்ட பங்களாவுக்கு சொந்தக்காரர். பூஜா ஹெக்டேவின் மாத வருமானம் ரூ.50 லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 40 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது.  

LATEST News

Trending News