ரவி மோகன் விவாகரத்து விவகாரம்!! நீதிமன்றத்தில் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி ரவி..

ரவி மோகன் விவாகரத்து விவகாரம்!! நீதிமன்றத்தில் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி ரவி..

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற வேண்டும் என்று கோரிய நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ரவி மோகனும் ஆர்த்தியும் தங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் யார் மேல் தவறு என்ற குற்றச்சாட்டுக்களையும் இணையதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ரவி மோகன் விவாகரத்து விவகாரம்!! நீதிமன்றத்தில் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி ரவி.. | Ravi Mohan Aarti Divorce Case Wife Ask Alimony

இந்நிலையில், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி ரவி இருவரின் விவாகரத்து வழக்கு விவகாரமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகினர். சென்னை 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி விசாரித்தார்.

விசாரணையின் போது தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்.

அதேபோல் ஆர்த்தி தரப்பில் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கு ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 12 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளனர்.  

LATEST News

Trending News